Tuesday, 16 May 2017

உயிரியல் - பொது அறிவு வினா - விடை

விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?  அரிஸ்டாட்டில்

லைக்கள் என்பது?  உடன் வாழ்விகள்

பறவை காற்றலைகளின் பணி?   துணைச் சுவாசம் , மிதவைத்தனம் , வெப்பச் சீராக்கம் , இவை அனைத்தும்

கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?  டினாய்டு

விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?   பாசோரியல் தகவமைப்பு

புறாவின் இதயம் ....................... உரையால் மூடப்பட்டுள்ளது?  பெரிகார்டியம்

குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?   குரோமானிமிக் சுருள்

நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?   3 ஆண்டுகள்

பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. மடங்கு கூர்மையானது?  8 மடங்கு

 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?  ஒட்டகம்

கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?   30,000 முட்டைகள்

புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?  வால்

 " LADY BIRD " என்று குறிப்பிடுவது?  ஒரு வகையான பூச்சி

 எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?  வாழும் உயிரினங்கள்

இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?  மேற்கு வங்காளம்

ஆர்னித்தாலஜி எனப்படுவது?  பறவைகள் பற்றிய ஆராய்ச்சி

மிகப்பெரிய உயிருள்ள செல்?   நெருப்புக்கோழி முட்டை

தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?  சிவப்பு

தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?   30,000

மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?   தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி

 "செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?   ரிபோசோம்

ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு?   உட்கரு

பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு?  சைட்டோபிளாசம்

செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு?  சென்ட்ரோசோம்

தாவரத்திற்கு வடிவமும், பாதுகாப்பும் கொடுத்து, தாவரத்தில் மட்டுமே இருக்கும் செல் உறுப்பு எது?   செல் சுவர்

தாவரத்தில் மட்டுமே இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் செல் உறுப்பு?   கணிகங்கள்

உருவத்தில் சிறியதாகவும், செல் சுவாசம் நடைபெறும் பகுதியாகவும், செல்லுக்கு ஆற்றல் அளிக்கும் இடமாகவும் விளங்கி வரும் செல்லின் உறுப்பு?   மைட்டோகாண்டிரியா

மிகவும் நீளமான செல்?   நரம்பு செல்

நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்?   தாவர செல்

விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு?  சென்ட்ரோசோம்

செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு?  லைசோசோம்

செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் "செல்லின் கட்டுப்பாட்டு மையம்" என்று பெயர் கொண்டதும், கோளவடிவில் உடையதுமான செல்லின் நுண்ணுறுப்பு எது?  உட்கரு

"தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு?  லைசோசோம்

"செல்லின் ஆற்றல் மையம்" என்றும் "செல்லின் ஆற்றல் சாலைகள்" என்றும் அழைக்கப்படுபவை?   மைட்டோகாண்டிரியா

பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி?  நுண்ணோக்கி

உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது?   செல்

சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்? வைட்டமின் - D

பாலில் அதிகம் காணப்படுவது?    கால்சியம்

BMI ன் மதிப்பு 20 - 40 இருந்தால் உடலின் தன்மை?  அதிக எடை

BMI ன் மதிப்பு 20 க்கு கீழ் இருந்தால் உடலின் தன்மை?    உடல் மெலிந்து இருக்கும்

Saturday, 15 April 2017

பொது அறிவு - 34


 • தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டது ?
  # 1958
 • தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ? # 1,30,058 சதுர கிலோ மீட்டர்கள்.
 • தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது? # மரகதப்புறா
 • தமிழ்நாட்டின் மாநிலப்பூ? # செங்காந்தள் மலர்
 • தமிழ்நாட்டின் மாநில விலங்கு? # வரையாடு
 • தமிழ்நாட்டின் மாநில மரம்? # பனை மரம்
 • தமிழ்நாட்டின் மிக உயர்ந்தசிகரம்? # தொட்டபெட்டா
 • எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்? # குலசேகர பாண்டியன்.
 • மிசா (MISA) மற்றும் பொடா (POTA) என்றால் என்ன?
  # உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் - (மிசா)
  # பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)
  # (பிரவன்சன் ஆப்டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
 • யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
  # பேட்ரிக் மேக்-மில்லன்
 • எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதச் சிற்பங்கள் உள்ளது? # இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
 • எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன? # குவாண்டனமோ வளைகுடா
 • தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?
  # 5952 கிலோமீட்டர்கள்
 • தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள்எத்தனை? # 532
 • தமிழ்நாட்டில் எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன? # 24
 • தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? # 1972 ஆம் ஆண்டு
 • தமிழ்நாட்டின் முக்கிய பெரியதுறைமுகங்கள்?
  தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்.
 • தமிழ்நாட்டின் பன்னாட்டு விமான நிலையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன? # சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்.
 • தமிழ்நாட்டின் உள்நாட்டு விமான நிலையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன? # சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்.
 • ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது? சென்னைக்கு அருகில் உள்ள ஆவடியில்.
 • பொதுத்துறை நிறுவனமான மாநில தொழில் மேம்பாட்டுக்கழகம் (SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது? # 1972 ஆம் ஆண்டு.
 • தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
  12,115 ( 2013 வரை ).
 • தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை? # 3504 ( 2013வரை )
 • இந்தியாவின் நீளமான ஆறு எது? # கங்கை
 • இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறு எது? # கோதாவரிஆறு
 • பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது? # யார்லுங் சாங்போ (Yarlung Tsangpo).
 • ஹிராகுட் அணை எந்த ஆற்றின்மேல் கட்டப்பட்டது? # மகாநதி
 • எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது? # ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.
 • தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு எது? # கோதாவரி
 • கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி? # துங்கபத்ரா நதி.
 • 1600 ஆண்டுகளுக்கு முன் அணை எந்த நதியில் யாரால் கட்டப்பட்டது? # கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது.
 • லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது? # ஸ்ரீபுரம், வேலூர்
 • உலகின் மிகப்பெரிய தீவு எது? # கிரீன்லாந்து
 • 2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ? #
  தசாவதாரம்
 • எது பாலைவனம் இல்லாத கண்டம்? # ஐரோப்பா
 • 1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார்? #
  எம். எஸ். சுப்புலட்சுமி.
 • எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன? # புதிய மலர்
 • International Air Transport Association IATAதலைமையகம் எது? # ஜெனிவா
 • நிரங்கரி – என்பது என்ன? # சீக்கிய மதப்பிரிவு
 • ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ (ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்? #
  லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்
 • உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது? # பாபிலோன்
 • ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது? # லூதுவேனியா
 • உலகின் முதல் பெண் பிரதமர்? # திருமதி. பண்டாரநாயஹ
 • தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
  # மேலக்கோட்டை
 • முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது? # திருநெல்வேலி
 • மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்? # ஆர்.எஸ். சர்க்காரியா
 • வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்? # 7ஆண்டுகள்

Saturday, 25 March 2017

புயல் எச்சரிக்கை கூண்டுகள் குறித்த விளக்கம்

புயல் எச்சரிக்கை கூண்டுகள் குறித்த விளக்கம்


புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :

ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது..

9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.

Wednesday, 8 March 2017

திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்

திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்

 • திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
 • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
 • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
 • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
 • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
 • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
 • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
 • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
 • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
 • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீர்களையும்  கொண்டது.
 • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
 • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
 • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
 • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
 • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
 • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
 • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
 • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
 • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
 • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
 • திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
 • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,
 • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
 • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
 • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
 • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
 • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
 • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
 • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
 • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
 • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
 • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
 • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
 • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


Monday, 4 July 2011

பொதுஅறிவு - 21

1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
வோலடைல்.

2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
கங்காரு எலி.

3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
ஏழு.

4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
330.

5. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
மக்ரானா.

6. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
க்ரயோ·பைட்ஸ்

7. டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் கோல்ப்

8. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
நெதர்லாந்து.

9. கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
பீச் கோம்பர்.

10. நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
ஆறு தசைகள்.

11. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.

12. நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.

13. மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ ·போபியா.

14. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.

15. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.

16. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

17. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க - 17 தசைகள்
உம் - 43 தசைகள்

18. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.

19. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

20. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.

21. விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?
பாரதம் 1929.

22. உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?திரு. வி.பி.சிங். இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம்வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்.

23. உலகின் மிகச் சிறிய சந்து எது?
புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.

24. உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
ஸ்வீடன்.

25. இந்திய விமானப்படையின் வாசகம் எது?
Touch of the glory.

Saturday, 4 June 2011

பொது அறிவு : 33

அரசர்களின் சிறப்புப் பெயர்கள்:

சேர வம்சம்:

உதியஞ்சேரல்                    -    பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு. 
                                                          அளித்தல்)

நெடுஞ்சேரலாதன்           -    இமயவரம்பன், ஆதிராஜன்.

சேரன் செங்குட்டுவன்     -    கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்.

சோழ வம்சம்:

முதலாம் பராந்தகன்     -    மதுரை கொண்டான், மதுரையும்   ஈழமும் கொண்டான்,   பொன் வேய்ந்த பராந்தகன்.

இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்)    -    யானை மேல் துஞ்சிய சோழன்.

இரண்டாம் பராந்தகன்     -    சுந்தரச் சோழன்.

முதலாம் இராஜராஜன்     -    மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி.

முதலாம் இராஜேந்திரன்     -     கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான்,     பண்டிதசோழன், உத்தமசோழன்.

இந்தியாவில் அவரநிலைப்பிடகனம்:


1. இந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது?
   ஷரத்து 352 முதல் 360 வரை.

2. இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறையை நடைபெறுவது தருணம் எது?
   தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.

3. அவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை?
   1. தேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352)
   2. மாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356)
   3. நிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)

4. தேசிய அவசரநிலைப்பிரகடனம் செய்ய ஏற்ற சூழல்கள் எவை?
   1. இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் போது
   2. இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் என்று அச்சம்
      ஏற்படும் போது
   3. இந்தியாவில் ஆயுதம் தாங்கிய கலவரம் நிகழும் போது.

5. குடியரசுத்தலைவர் எப்படி அவசரநிலைப்பிரகடனத்தை அறிவிக்கிறார்?
   மத்திய அமைச்சரவையின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்ற பிறகு.

6. தேசிய அவசரநிலைப்பிரகடனம் எத்தனை நாட்களுக்குள்                
   பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்?   
   1 மாதத்திற்குள் (மக்களவை கலைக்கப்பட்டிருந்தால் புதிய மக்களவை
    கூடிய  1 மாதத்திற்குள்.

7. மக்களவை, மாநில சட்டபேரவைகளின் ஆயுட்காலம்
   எப்போது  நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு?
   தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.

8. மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில்
   முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது?
   பஞ்சாப்.

9. மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில்
   அதிகமுறை பிரகடனப்படுத்தப்பட்டது? 
   கேரளா, உ.பி.

10. நிதிநிலை மாநில அவசரநிலைப்பிரகடனம் இதுவரை எத்தனை
    முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?
    இதுவரை பிடகடனப்படுத்தப்படவில்லை.

11. இந்தியாவில் எத்தனை முறை தேசிய
    அவசரநிலைப்பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்டது?
     1. சீனப்போர் 1962
     2. பாகிஸ்தான் போர் 1971
     3. உள்நாட்டு கலவரம் 1975

தேசிய விளையாட்டுகள்:

இந்தியா : ஹாக்கி

பாகிஸ்தான் : ஹாக்கி

கனடா : ஐஸ்ஹாக்கி

ஆஸ்திரேலியா : கிரிக்கெட்

இங்கிலாந்து : கிரிக்கெட்

பிரேசில் : கால்பந்து

ரஷ்யா : செஸ், கால்பந்து

ஸ்காட்லாந்து : ரக்பீ, கால்பந்து

சீனா : டேபிள் டென்னிஸ்

மலேசியா : பேட்மிடன்

அமெரிக்கா : பேஸ்பால்

ஜப்பான் : ஜுடோ அல்லது ஜீட்சு

ஸ்பெயின் : காளை அடக்குதல்

சிறப்பு தினங்கள்:


குடியரசு தினம் - ஜனவரி 26

உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25

தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

உலக மகளிர் தினம் - மார்ச் 8

நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15

உலக பூமி நாள் - மார்ச் 20

உலக வன நாள் - மார்ச் 21

உலக நீர் நாள் - மார்ச் 22

தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5

உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7

பூமி தினம் - ஏப்ரல் 22

உலக புத்தகநாள் - ஏப்ரல் 23

தொழிலாளர் தினம் - மே 1

உலக செஞ்சிலுவை தினம் - மே 8

சர்வ தேச குடும்பதினம் - மே 15

உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17

தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
(ராஜிவ் காந்தி நினைவு நாள்)

காமன்வெல்த் தினம் - மே 24

உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26

உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11

கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15

ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6

நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15

தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29

ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8

சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16

உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27

உலக விலங்கு தினம் - அக்டோபர் 4

விமானப்படை தினம் - அக்டோபர் 8

உலக தர தினம் - அக்டோபர் 14

உலக உணவு தினம் - அக்டோபர் 16

ஐ.நா.தினம் - அக்டோபர் 24

குழந்தைகள் தினம்  - நவம்பர் 14

உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

உடல் ஊனமுற்றோர் தினம்-  டிசம்பர் 3

இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4

கொடிநாள் - டிசம்பர் 7

சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9

மனித உரிமை தினம் - டிசம்பர் 10

விவசாயிகள் தினம் - டிசம்பர் 23