Tuesday 16 May 2017

உயிரியல் - பொது அறிவு வினா - விடை

விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?  அரிஸ்டாட்டில்

லைக்கள் என்பது?  உடன் வாழ்விகள்

பறவை காற்றலைகளின் பணி?   துணைச் சுவாசம் , மிதவைத்தனம் , வெப்பச் சீராக்கம் , இவை அனைத்தும்

கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?  டினாய்டு

விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?   பாசோரியல் தகவமைப்பு

புறாவின் இதயம் ....................... உரையால் மூடப்பட்டுள்ளது?  பெரிகார்டியம்

குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?   குரோமானிமிக் சுருள்

நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?   3 ஆண்டுகள்

பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. மடங்கு கூர்மையானது?  8 மடங்கு

 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?  ஒட்டகம்

கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?   30,000 முட்டைகள்

புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?  வால்

 " LADY BIRD " என்று குறிப்பிடுவது?  ஒரு வகையான பூச்சி

 எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?  வாழும் உயிரினங்கள்

இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?  மேற்கு வங்காளம்

ஆர்னித்தாலஜி எனப்படுவது?  பறவைகள் பற்றிய ஆராய்ச்சி

மிகப்பெரிய உயிருள்ள செல்?   நெருப்புக்கோழி முட்டை

தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?  சிவப்பு

தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?   30,000

மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?   தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி

 "செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?   ரிபோசோம்

ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு?   உட்கரு

பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு?  சைட்டோபிளாசம்

செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு?  சென்ட்ரோசோம்

தாவரத்திற்கு வடிவமும், பாதுகாப்பும் கொடுத்து, தாவரத்தில் மட்டுமே இருக்கும் செல் உறுப்பு எது?   செல் சுவர்

தாவரத்தில் மட்டுமே இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் செல் உறுப்பு?   கணிகங்கள்

உருவத்தில் சிறியதாகவும், செல் சுவாசம் நடைபெறும் பகுதியாகவும், செல்லுக்கு ஆற்றல் அளிக்கும் இடமாகவும் விளங்கி வரும் செல்லின் உறுப்பு?   மைட்டோகாண்டிரியா

மிகவும் நீளமான செல்?   நரம்பு செல்

நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்?   தாவர செல்

விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு?  சென்ட்ரோசோம்

செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு?  லைசோசோம்

செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் "செல்லின் கட்டுப்பாட்டு மையம்" என்று பெயர் கொண்டதும், கோளவடிவில் உடையதுமான செல்லின் நுண்ணுறுப்பு எது?  உட்கரு

"தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு?  லைசோசோம்

"செல்லின் ஆற்றல் மையம்" என்றும் "செல்லின் ஆற்றல் சாலைகள்" என்றும் அழைக்கப்படுபவை?   மைட்டோகாண்டிரியா

பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி?  நுண்ணோக்கி

உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது?   செல்

சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்? வைட்டமின் - D

பாலில் அதிகம் காணப்படுவது?    கால்சியம்

BMI ன் மதிப்பு 20 - 40 இருந்தால் உடலின் தன்மை?  அதிக எடை

BMI ன் மதிப்பு 20 க்கு கீழ் இருந்தால் உடலின் தன்மை?    உடல் மெலிந்து இருக்கும்

No comments:

Post a Comment