Saturday, 4 June 2011

பொது அறிவு: 32

தமிழ் நாடு பற்றிய தகவல்கள் :

தலைநகர் - சென்னை

பரப்பளவு - 1,30,058 ச.கி.மீ

புவியியல் அமைப்பு  -  8°5' முதல் 13°35' வடக்கு அட்சரேகை வரை 76°15' முதல் 80°20' கிழக்கு தீர்க்க ரேகை வரை.

மக்கள் தொகை (2001 சென்சஸ்) - 62405679 (ஆண்கள்-3,14,00,909; பெண்கள்-3,10,04,770).

மக்கள் நெருக்கம் (2001 சென்சஸ்) - 480/ச.கி.மீ.

கல்வியறிவு (2001 சென்சஸ்)  -  73.4% (ஆண்கள்-82.4% பெண்கள்-64.4%)

தமிழ் நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி - காவிரி.

தமிழ்நாட்டின் நுழைவாயில்- தூத்துக்குடி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
ஆடுதுறை

தமிழ்நாட்டின் பழமையானதும் மிகப்பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் எது?
நெல்லிக்குப்பம்.

காஞ்சிபுரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி என்ன?
பட்டு

தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்?
இராஜ ராஜன்

தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள கூட்டுத்துறை அனல் மின்சக்தி அமைய உள்ள இடம் எது?
ஜெயங்கொண்டம்

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம் -- ஆனைமூடி

தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களைத் தொகுதி எந்த மாநிலம்?
திருச்செந்தூர்.

தமிழகத்தில் கல்வியறிவு விழுக்காடு அதிகமுள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி.

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?
அணில்.

சுருளி ஆறு எந்த மாவட்டத்தில் பாய்கிறது?
தேனி.

கார்டுன் படம் முதன்முதலி்ல் வெளிவந்த தமிழ் நாளிதழ் எது?
இந்தியா.

தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
18.

இந்திய அளவில் தமிழகம் மக்கள் தொகையில் எந்த நிலையில் உள்ளது?
ஆறாம் இடம்.

இந்திய அளவில் தமிழகம் எழுந்தறிவில் எந்த நிலையில் உள்ளது?
ஏழாம் இடம்.

தமிழ்நாட்டில்  உப்புச் சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
இராஜாஜி.

இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம்
தமிழ்நாடு.

தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை மரிய இருதயம் தொடர்புடைய விளையாட்டு எது?
கேரம்.

காந்தி ஆசிரமம் அமைந்துள்ள ஊர் - திருச்செங்கோடு.

தமிழ்நாட்டில் மஞ்சள் காமாலை நோய் சிகிச்சைக்கு பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம் - கீழாநெல்லி.

தமிழ்நாட்டின் சிறிய ஜப்பான் என்று அழைக்கப்பட்டது -
சிவகாசி.

அறிவியல் - செல் அமைப்பு:

செல் எதனால் சூழப்பட்டுள்ளது?
பிளாஸ்மாபடலம்

செல்லின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மைக்ரான்

செல்லின் உறுப்புக்கள் எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மில்லி மைக்கரான், ஆங்ஸ்ட்ராம்

விலங்கு செல், தாவர செல் இவற்றில் எதற்கு செல் சுவர் உண்டு?
தாவர செல்

செல்சுவர் எதனால் ஆனது?
பெக்டின், செல்லுலோஸ்

பிளாஸ்மாபடலத்தின் தடிமன் எவ்வளவு?
75 ஆங்ஸ்ட்ராம்

என்டோபிளாச வலை அமைப்பை வெளியிட்டவர் யார்?
போர்ட்டர்

கோல்கை உறுப்புகள் அமைப்பை வெளியிட்டவர் யார்?
காமில்லோ கோல்கை (1898)

ரைபோசோமை கண்டறிந்தவர் யார்?
பாலட்

செல்லின் ஆற்றல் (அ) சக்தி நிலையம் எனப்படுவது?
மைட்டோகாண்டிரியா

தற்கொலைப்பைகள் எனப்படுபவை எவை?
லைசோசோம்கள்

சூரியக்குடும்பம்:

சூரியன்:
சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன். இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால்
உள்ளது.

புதன்:

இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும். அடுப்பின்றிச் சட்டியின்றி இதன் மேற்பரப்பில் தோசையே சுடலாம். புதனின் நிறம் பழுப்பு. இது சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 நாள்கள் ஆகின்றன.

வெள்ளி:

சூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். சூரியனை ஒருமுறை சுற்றிவர வெள்ளிக்கு 7.5 மாதங்களாகின்றன.

பூமி:

சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம்.  பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 ஆகின்றன.

செவ்வாய்:

செவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம்  செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. செவ்வாய் 23 மாதங்களில் சூரியனைச்சுற்றி வருகிறது.

வியாழன்:

ஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர 12 ஆண்டுகளாகின்றது.

சனி:

சனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும்.

இந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன.

யுரேனஸ்:

ஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. யுரேனஸ், சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 ஆண்டுகள்
ஆகின்றன.

நெப்டியூன்:

நெப்டியூன் எட்டாவது கோளாகும். இது மிகவும் குளிர்ச்சியானது. இதைத்
தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 ஆண்டுகளாகும்.

புளூட்டோ:

ஒன்பதாவது கோளான புளூட்டோ தான் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோள்களிலேயே மிகச் சிறியது புளூட்டோதான். புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள்
ஆகின்றன.

தற்போது, இது ஒரு கோள் அல்ல என்றும், கோளுக்கான தகுதி இதற்கு இல்லை என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

உயிரினங்களின் அமைப்பு நிலைகள்:

காரல் லின்னேயஸ் அறிவியல் முறையான இரு சொல் பெயர் பயன்படுத்திய மொழி -- இலத்தீன்.

எலுமிச்சையின் அறிவியல் பெயர் - சிட்ரஸ் ஆரன்ட்டி ஃபோலியா.

மாதுளையின் அறிவியல் பெயர் - ப்யூனிகா க்ரானேட்டம்.

புளியின் அறிவியல் பெயர் - டாமரின்டஸ் இன்டிகா.

ஆலமரத்தின் தாவரவியல் பெயர் - ஃபைகஸ் பெங்காலன்ஸிஸ்.

கேரட்டின் தாவரவியல் பெயர் - டாக்கஸ் கரோட்டா.

நகர்வதற்குரிய சிறப்பு உறுப்புகள் பவளப்பூச்சியில் இல்லை.

உயரினங்களின் பல்தன்மை:

பிளாஸ்மா சவ்வு அரைசெலுத்தி சவ்வுபோல் செயல்படுகிறது.

சைட்டோபிளாசத்தில் காணப்படும் ஜினோம் அல்லாத டி.என்.ஏ. - பிளாஸ்மி்ட்.

கிராம் எதிர்வகைச் சார்ந்த கோல்வடிவ பாக்டீரியா - எஸ்செரிசியா கோலை.

எ.கோலை பாக்டீரியத்தின் கசையிலை அல்லாத அமைப்பு - ஃபிம்பிரியே.

பாக்டீரிய இனப்பெருக்க முறை - இருசம பிளவு முறை.

இணைவு முறை இனப்பெருக்கம் முதன்முதலில் எ.கோலை பாக்டீரியத்தில் கண்டறியப்பட்டது.

மரபுப் பொறியியலி்ல் நகல் பெருக்கம் செய்யும் கடத்தியாக செயல்படுவது - பிளாஸ்மிட்.

பாக்டீரியத்தின் அளவு - 0.3 - 5.0 மைக்ரான்.

செல்லைச் சுற்றி கசையிழை கொண்ட பாக்டீரியம் - பெரிட்டிரைகஸ்.

பாக்டீரிய செல்சுவர் பெட்டிடோகிளைக்கன் மற்றும் லிப்போ பாலிசாக்ரைடுகளால் ஆனது.

ரைசோபியம் என்பது - கூட்டுயரி பாக்டீரியம்.

பாரமீசியத்தின் அளவு - நீளம் 170 லிருந்து 290 மைக்ரான் வரை.

செருப்பு வடிவ உயரி - பாரமீசியம்.

பாரமீசியத்தின் வாய் பள்ளம் - பெரிஸ்டோமியரல்.

சைட்டோபைஜ் என்பது - பாரமீசியத்தின் மலப்புழை.

பாரமீசியத்தின் உடலின் மேல் காணப்படும் மெல்லியசவ்வு - பெல்லிக்கிள்.
பாரமீசியத்தின் பாதுகாப்பு உறுபபு - ட்ரைகோசிஸ்ட்.
இரண்டு உட்கருக்களை உடையது  - பாரமீசியம். 

பூமியைப் பற்றிய செய்திகள்: 
    * பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.

    * பூமியின் நிலப்பரப்பு 29 %.

    * பூமியின் நீர்ப்பரப்பு 71 % .

    * பூமியின் கன அளவு 1.083 X 1024  க.மீ.

    * பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.

    * பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.

    * பூமியிலிருந்து  சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.

 * பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.

* பூமியின் நிலப்பரப்பு 29 %.

* பூமியின் நீர்ப்பரப்பு 71 % .

* பூமியின் கன அளவு 1.083 X 1024  க.மீ.

* பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.

* பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.

* பூமியிலிருந்து  சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.

* பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 1700 கி.மீ. / ம.

* பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் 23:56:4:09.

* பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 9.54 வினாடிகள்.

* பூமியின் ஆழ் கடல் பசிபிக் பெருங்கடல்

* பூமியின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம். ( 8848 மீ. )

* பூமியின் தாழ்ந்த நிலம் சாக்கடல் ( Dead see )

* பூமியின் தாழ்ந்த நிலமான சாக்கடலின் தாழ்வு நிலை 399 மீ. ( கடல் மட்டத்தை விட )

* பூமியிலுள்ள நிலங்களின் சராசரி உயரம் 756 மீ .

* பூமியின் சம நோக்கு நாட்கள் மார்ச் 21, செப்டெம்பர் 23.

* அதிகமான இரவும் அதிகமான பகலும் ஏற்படும் பகுதி துருவப்பகுதி.

* பூமியின் வட கோளத்தின் நீண்ட நாள் ஜூன் 21 .

* பூமியின் தென் கோளத்தின் நீண்ட நாள் டிசம்பர் 22 .

* பூமியின் துருவப்பகுதியில் சாய்வு 23  1/2° .

* பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ/நி.

* பூமி சூரியனைச் சுற்றும் அதிகபட்ச தூரம்(aphelion) 152 மில்லியன் கி.மீ.

* பூமி சூரியனைச் சுற்றும் குறைந்த பட்ச தூரம்(perihelion) 147 மில்லியன் கி.மீ.

*  பூமியை சூழ்ந்துள்ள வாயு மண்டலத்தின் உயரம் 960 கி.மீ.


அமிலங்களும் அவற்றின் மூலங்களும்:
1) எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
சிட்ரிக் அமிலம்.
 
2) சிறுநீரில் உள்ள அமிலம் எது?
யூரிக் அமிலம்.

3) எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்.

4) புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
லாக்டிக் அமிலம்.

5) கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
பியூட்டிரிக் அமிலம்.
 
6) புளி, திராட்சை, ஆப்பிள் இவற்றி்ல் உள்ள அமிலம் எது?
டார்டாரிக் அமிலம் .

7) வினிகரில் உள்ள அமிலம் எது?
அசிட்டிக் அமிலம்.
 
8) ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
மாலிக் அமிலம்.

9) தக்காளியில் உள்ள அமிலம் எது?
ஆக்ஸாலிக் அமிலம்.

10) கொழுப்புகளில் உள்ள அமிலம் எது?
ஸ்டீயரிக் அமிலம்.
 
11) பித்தநீரில் உள்ள அமிலம் எது?
 கோலிக் அமிலம்.

No comments:

Post a Comment